News August 4, 2024
9 நிமிடத்தில் முழு சார்ஜ்.. 965 கி.மீ மைலேஜ்!

பேட்டரி சார்ஜிங், மைலேஜ் மின்சார வாகனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. இதானல் மின் வாகனங்களின் பக்கம் செல்ல மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இச்சிக்கலை 2027க்குள் தீர்க்க உத்தேசித்த சாம்சங் நிறுவனம், வெறும் 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து 965 கி.மீ மைலேஜ் தரும் பேட்டரியை தயாரித்துள்ளது. இது 20 ஆண்டுகள் வரை வேலை செய்யும், எந்த வாகனத்திலும் பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.
Similar News
News January 21, 2026
இந்தியா – நியூசிலாந்து முதல் T20

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் இன்றுமுதல் தொடங்குகிறது. முதல் போட்டி இன்றிரவு 7 மணிக்கு நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், T20 தொடர் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்திய அணி, இந்த T20 தொடரை வென்று அசத்துவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
News January 21, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 21, தை 7 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 21, 2026
திமுக அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: விவசாயிகள்

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் நடைபெற்ற
விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர், தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


