News April 8, 2025
எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
நாடு முழுவதும் நாளை முடங்குகிறது

நாடு முழுவதும் நாளை (டிச.31) ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு கோரி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இதனால், இந்த நிறுவனங்களின் டெலிவரி சேவை முடங்கலாம் என கூறப்படுகிறது. எனவே, புத்தாண்டுக்கு தேவையான பொருள்களை இன்றே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.
News December 30, 2025
BREAKING: புதிய ரேஷன் கார்டுகள்.. அரசு அறிவிப்பு

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், TN அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 2021-ம் ஆண்டு மே முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23% பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 20.56 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 30, 2025
தவெகவுக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்? வானதி

தவெக கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் என்ன வித்தியாசமென்று விஜய் தெளிவாக சொல்லவேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதையே இதுவரை சொல்லவில்லை என்ற அவர், விஜய் சினிமா வசனங்களை பேசுவதை போல நாங்களும் பேசமுடியுமா எனவும் கேட்டுள்ளார். மேலும், எந்த வகையில் பாஜக தனக்கு எதிரி என்று விஜய் சொல்லாதவரை, நாங்கள் ஏன் அவரை விமர்சிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


