News January 27, 2026

FTA ஒப்பந்தம்.. தமிழகத்திற்கு ஏற்படும் பயன்

image

ஐரோப்பிய யூனியன் உடனான <<18973435>>FTA ஒப்பந்தத்தால் <<>>இந்திய ஜவுளித்துறை பெரிதும் பலனடையும் என கூறப்படுகிறது. ஏனெனில், இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஆடைகளுக்கு 10% சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் படிப்படியாக வரி குறைக்கப்படும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து ஜவுளி ஏற்றுமதி செய்வோர், வங்கதேசம், வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் போட்டியை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

Similar News

News February 2, 2026

தங்கம், வெள்ளி: எதில் முதலீடு செய்வது சிறந்தது

image

தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வதே அதிக லாபத்தை தரும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். தங்கத்தில் ₹1 லட்சம், வெள்ளியில் ₹1 லட்சம் என முதலீடு செய்தால், 1 வருடம் கழித்து தங்கம் ₹1,15,000 ஆகவும், வெள்ளி ₹1,25,000 ஆகவும் இருக்கும் என விளக்கியுள்ளார். ஆபரணமாக மட்டும் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கும் வெள்ளி தேவைப்படுவதால் அதன் மதிப்பு அதிகம் என அவர் கூறியுள்ளார்.

News February 2, 2026

இதற்காக தான் தவெக தொடங்கப்பட்டது: விஜய்

image

அண்ணா அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களே என கண்ணீர் வடித்து அதிமுகவை MGR தொடங்கினார் என விஜய் பேசியுள்ளார். அதேபோலதான் அண்ணா, MGR, காமராஜர் உட்கார்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள்(திமுக) இருக்கிறார்களே என மக்கள் கண்ணீர் வடித்ததாக கூறிய அவர், அதற்காகவே தவெக தொடங்கப்பட்டது என கூறியுள்ளார். அப்போது MRG-ஐ விமர்சித்தவர்கள்தான், தற்போது தன்னையும் விமர்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

News February 2, 2026

மாரடைப்பை ஏற்படுத்தும் 7 அன்றாட பழக்கங்கள்!

image

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல்நல பாதிப்பு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. தினசரி நாம் கடைபிடிக்கும் ஒரு சில பழக்கங்கள், நாளடைவில் மாரடைப்பு பாதிப்பை உண்டாக்குகிறது. அது என்னென்ன பழக்கங்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா உடனே மாத்திக்கோங்க.. ஹெல்தியா இருங்க!

error: Content is protected !!