News March 28, 2024
நாளை முதல் 3 நாட்களுக்கு..

நாளை (29.03.2024) புனித வெள்ளி என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகின்றன. ஆகையால், சுற்றுலா தலங்களில் மக்களின் நெருக்கடி அதிகம் இருக்கும். சொந்த ஊருக்கு செல்வோர் இன்று முதலே பொது போக்குவரத்தில் அதிகம் செல்வர். எனவே, பயணம் செய்யவிருக்கும் மக்கள் அடுத்த 3 நாட்களுக்கு முறையாக திட்டமிடவும்.
Similar News
News March 7, 2026
மார்ச் 7: வரலாற்றில் இன்று

*1919 – நடிகர் நம்பியார் பிறந்தநாள் *1945 – பாடகர் சங்கரநாராயணன் பிறந்தநாள் *1949 – அரசியல்வாதி குலாம் நபி ஆசாத் பிறந்தநாள் *1952 – VIV ரிச்சர்ட்ஸ் பிறந்தநாள் *1960 – இசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்தநாள் *2006 – வாரணாசியில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொலை *2014 – நகைச்சுவை நடிகர் பாலாஜி மறைந்த நாள் *2020 – அரசியல்வாதி க.அன்பழகன் மறைந்த நாள்
News March 7, 2026
ஈரானில் மொசாட் உளவாளி கொலை?

ஈரானின் QUDS படை தலைவர் இஸ்மாயில் கானியை அந்நாட்டின் புரட்சிகர காவல் படை கொன்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அவர் மொசாட்டுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2024 டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் Haniyeh இருந்த ரகசிய இடத்தில் அவர் காட்டிக்கொடுத்ததால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
News March 7, 2026
திராவிட மாடலால் ஆங்கிலம் பேசிய PM மோடி: உதயநிதி

சமீபத்தில் மதுரையில் நடந்த NDA மாநாட்டில் PM மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்நிலையில், அவர் TN வந்தபோதெல்லாம் ஹிந்தியில் பேசியது தப்புத்தப்பாக தமிழில் பெயர்க்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் ஆங்கிலத்தில் பேசியதாகவும் DCM உதயநிதி தெரிவித்துள்ளார். இது தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றும், PM மோடியை ஆங்கிலத்தில் பேச வைத்தது திராவிட மாடல் ஆட்சி தான் எனவும் கூறியுள்ளார்.


