News March 9, 2025
இனி அதிமுகவில் நீக்கம் தான்.. இபிஎஸ் எச்சரிக்கை

ஜெ., இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால், தற்போது திருச்சி அதிமுகவினர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருவதாக இபிஎஸ் எச்சரித்துள்ளார். திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். இதுதான் கடைசி எச்சரிக்கை. இனி தொடர்பில் இருப்பது தெரியவந்தால் அதிமுகவில் இருந்து நீக்கம் தான் என்று காட்டமாக எச்சரித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
மதிமுகவில் ஓயாத மோதல் (1/2)

மல்லை சத்யா மீதான அதிருப்தியால் கட்சி பதவியை துறப்பதாக 3 மாதத்திற்கு முன்பு துரை வைகோ முதலில் அறிவித்ததும், பிறகு 2 பேரையும் வைகோ சமாதானம் செய்ததும் அறிந்ததே. அதன்பிறகு 2 பேர் இடையேயான கருத்து வேறுபாடு குறையவில்லை எனவும், 2 பேரின் ஆதரவாளர்கள் பிரச்னையை ஊதி பெரிதாக்கியதாகவும் கூறப்படுகிறது. 2 பேரையும் இனி சமாதானம் செய்ய முடியாது என வைகோவும் புரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
News July 11, 2025
மதிமுகவில் ஓயாத மோதல் (2/2)

கடந்த 4 நாள்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளை அழைத்த வைகோ, இனிமேல் பேனர்கள், விளம்பரங்களில் மல்லை சத்யா படம், பெயரை வெளியிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்தே பேட்டியில் மல்லை சத்யா குறித்த அதிருப்தியை வைகோ வெளிப்படுத்தியதாகவும், பதிலுக்கு சத்யாவும் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் மல்லை சத்யா கட்சியை விட்டு வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
News July 11, 2025
குடும்பம் முக்கியம்தான்; ஆனால்.. கம்பீர் பதில்

சுற்றுப்பயணத்தின்போது கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தை அழைத்துச் செல்வது தொடர்பாக BCCI வெளியிட்ட புதிய விதிகளுக்கு கோலி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கம்பீர், குடும்பம் முக்கியம்தான்; ஆனால் இங்கு நீங்கள் வந்திருக்கும் காரணம் வேறு என கூறியுள்ளார். ஒரு டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் குறைவான நபர்களுக்குத்தான் நாட்டையே பெருமைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.