News September 2, 2025

இரவு 11 மணி முதல்… இதை செய்யாதீங்க

image

இரவுத் தூக்கத்தை தவிர்ப்பது, பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகும். குறிப்பாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சேதமடைந்த திசுக்களை இரவில் தான் உடல் பழுதுபார்த்து சரி செய்கிறது. ஆகவே, இரவில் தூங்குவது அவசியம். குறிப்பாக, உள்ளுறுப்புகள் தங்கள் பழுதுகள், கழிவுகள் நீக்கும் பணிகளை மேற்கொள்ளும் இரவு 11 முதல் அதிகாலை 4 மணிவரை விழித்திருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Similar News

News September 3, 2025

10-வது மட்டுமே படித்தவர் ₹1 கோடி சேமித்த கதை

image

பெங்களூருவில் 10-வது மட்டுமே படித்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளில் ₹1 கோடி சேமித்து கவனத்தை ஈர்த்துள்ளார். ₹4,200 சம்பளத்தில் வேலையை தொடங்கிய அவர், வங்கிகளில் FD, RD மூலம் பணம் சேமித்துள்ளார். வேலைக்கு சேர்ந்த அடுத்த சில ஆண்டுகளில் கடின உழைப்பால் ₹63,000 வரை சம்பளம் உயர்ந்தாலும் அவர் வீடு, கார் என எதையும் வாங்கவில்லை. நமது இலக்குகளை அடைய பொறுமையும், ஒழுக்கமும் அவசியம் என அவர் கூறுகிறார்.

News September 3, 2025

2026 தேர்தலில் 4வது இடத்தில் அதிமுக: புகழேந்தி

image

2026 தேர்தலில் சீமானுடன் EPS போட்டி போட வேண்டியிருக்கும் என புகழேந்தி பேசினார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக பலமடைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் பிரிந்திருந்தால் 4வது இடத்திற்கு தள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் திமுக வெற்றி பெறுவதற்கு EPS காரணமாகி விடுவார் என்று கூறினார். அதிமுகவை ஒருங்கிணைக்க நினைக்கும் சசிகலா வீட்டிலேயே பதுங்கி கொள்வதாக அவர் சாடினார்.

News September 3, 2025

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

image

*எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காக துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
*கோழைகளே பாவ காரியங்களை புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருபோதும் பாவம் செய்யார்.
*சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
*எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
*உறுதியுடன் இரு, அதற்கு மேலாக தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

error: Content is protected !!