News August 16, 2024
வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு

வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு மேற்கொள்வது பல பயன்களை தரும் என ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக ராகு காலத்தில் மேற்கொள்ளும் வழிபாடால் துர்க்கை நல்வழி காட்டுவார் என்றும், அரண் போல தீமையை தடுப்பார் என்றும் கூறுகிறது. துர்கா தேவிக்கு அம்பிகை, சூலினி என்ற பெயர்களும் உண்டு. இந்த பெயரில் உள்ள மந்திரங்களை சொல்லி வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
Similar News
News December 4, 2025
தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது: பாஜக

இன்றே தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நயினார் நாகேந்திரன் விரைந்துள்ளார். அப்போது தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன், தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்னை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
News December 4, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது HAPPY NEWS

டிச.12-ம் தேதி விடுபட்ட, தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்களிடம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டிச.12-ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில், கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
News December 4, 2025
நெசவாளர்களுக்கு துரோகம் செய்த திமுக: EPS

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க திமுக அரசு முயற்சிப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு வழங்கும் வேஷ்டி மற்றும் சேலைகள் 50% மேல் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கப்படுவதால், தமிழக நெசவாளர்கள் பாதிப்பை சந்திப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். திமுக செய்துள்ள துரோகத்திற்கு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் 2026 தேர்தலில் பதிலடி தருவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.


