News April 2, 2024
மஹுவா மொய்த்ரா மீது புதிய வழக்கு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே மஹுவா மீது ஃபெமா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
யார் பாமக தலைவர்: ராமதாஸா? அன்புமணியா?

விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
News August 17, 2025
அன்புமணியின் நியமனங்கள் செல்லாது: ராமதாஸ்

அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
போன் செய்தபோது இறப்பு செய்தி: கண்கலங்கிய ஸ்டாலின்

பிறந்தநாள் வாழ்த்து கூற போன் செய்தபோது, சின்னம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தியை வேதனையுடன் விசிக தலைவர் திருமா சொன்னதும், ‘கண்கள் கலங்கினேன்’ என்று CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும், அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும், அவரது (திருமா) உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் நினைத்து துயரம் அடைந்தேன் என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.