News July 26, 2024
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒடிஷாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் புவனேஸ்வர் மார்க்கத்தில், ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாத நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை சரக்கு ரயிலும், ஒரு முறை பயணிகள் ரயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
Similar News
News March 11, 2026
PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

TN-ல் அனைத்து வகை சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதை PM மோடி உறுதிசெய்ய வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்தில் அவர், உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்மயமான TN பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 11, 2026
₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News March 11, 2026
‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’

மும்பையில் காதலன் கொடுத்த மென்டல் டார்ச்சரால், 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக புத்தி கொண்ட காதலன், மாணவி ஸ்துதி சோனாவானேவை(24) தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணருங்கள் நண்பர்களே!


