News April 18, 2025
காேயில் பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம்

தற்போது தமிழகம் முழுவதும் நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி தர வேண்டுமென அண்மையில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிர்வாகத்தால் இயக்கப்படும் பஸ்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.
Similar News
News October 25, 2025
BREAKING: இந்தியாவுக்கு 237 ரன்கள் டார்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் ஆஸி., அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி., அணியில் அதிகபட்சமாக மேட் ரென்ஷா 56 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில் ராணா 4 விக்கெட்களையும், சுந்தர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். வெல்லுமா இந்தியா?
News October 25, 2025
தீபாவளிக்காக சிறப்பு Stamp-ஐ வெளியிட்ட கனடா

தீபாவளி பண்டிகைக்காக, கனடா அஞ்சல் துறை சார்பில் சிறப்பு Stamp வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம், ஹிந்தியில் தீபாவளி என்ற வார்த்தையுடன் ரங்கோலி படம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பை கொண்டாடும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலையை, இந்திய வம்சாவளியை சேர்ந்த கலைஞர் ரிது கனல் வடிவமைத்துள்ள நிலையில், இந்திய தூதரகம் இதற்கு நன்றி தெரிவித்துள்ளது.
News October 25, 2025
சற்றுநேரத்தில் நாடு முழுவதும் முடங்க போகிறது.. ALERT

நாடு முழுவதும் இன்று (அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என SBI அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.


