News September 15, 2025
ராமேஸ்வரம் – காசிக்கு இலவச ஆன்மிக பயணம்

தமிழகத்தில் 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு இலவசமாக ஆன்மிக பயணம் அழைத்து செல்ல அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலோ, www.hrce.tn.gov.in இணையதளத்திலோ டவுன்லோடு செய்து, வரும் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 60 -70 வயதிற்குள்ளும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
Similar News
News September 15, 2025
அரசியலில் அற்புத தலைவர் அண்ணா: விஜய்

குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா என அவரது 117-வது பிறந்தநாளையொட்டி விஜய் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ‘மக்களிடம் செல்’ என்ற அவரது அரசியல் மந்திரத்தை பின்பற்றி, 1967 அரசியல் மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் செயல்படுத்த வேண்டும் எனவும் தவெகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
News September 15, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.15) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,210-க்கும், சவரன் ₹81,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹143-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,43,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில்(திங்கள்கிழமை) ஏறு முகத்துடன் தொடங்கிய தங்கம் இந்த வாரத்தில் இறங்குமுகத்துடன் தொடங்கியுள்ளது.
News September 15, 2025
தமிழகத்தில் 8 நாள்களுக்கு மழை: IMD

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் 17-ம் தேதி கனமழை பெய்யும் என IMD கூறியுள்ளது. இதனால் குடையை ரெடியா வையுங்க மக்களே..!