News January 1, 2025
மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்.. உத்தரவு பறந்தது

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 2025-26ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 13, 2025
Cinema Roundup : தள்ளிப்போகும் ‘கருப்பு’ ரிலீஸ்

* கவினின் ‘கிஸ்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. * தனது அடுத்த படம் வாடிவாசலா ? சிம்புவுடன் வடசென்னை யுனிவர்ஸா? 10 நாட்களில் தெரியும் என வெற்றிமாறன் தகவல். * பொங்கல் ரேஸில் இருந்து சூர்யாவின் ‘கருப்பு’ படம் விலக இருப்பதாக தகவல் வாய்ப்புள்ளது. * பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு ஷாருக்கான் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
News September 13, 2025
Sports Roundup: பாக்சிங்கில் இந்திய மகளிர் அசத்தல்

* உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 57Kg எடைப்பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியா, 80Kg எடைப்பிரிவில் நுபுர் ஷியோரன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். * டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம். * ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம். * புரோ கபடி லீக்கில் பெங்களூரு புல்ஸ் 28-23 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.
News September 13, 2025
பாமகவில் இருந்து உருவான புதிய கட்சிகள்

அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவர் புதிய கட்சியை தொடங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால், பாமகவுக்கு தலைவர் நானே என அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கெனவே, பாமகவில் இருந்து பிரிந்தவர்கள் புதிய கட்சிகளை தொடங்கியுள்ளனர். பிரிந்து சென்றவர்களும், அவர்கள் தொடங்கிய கட்சி குறித்தும் அறிய மேலே உள்ள போட்டோவை Swipe செய்யவும்.