News March 14, 2025
5 லட்சம் பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா

நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கான அளவீடு, 10 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக கூறிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அரசின் இந்த அறிவிப்பு, வீட்டுமனை பட்டாவுக்காக காத்திருப்போருக்கு நிம்மதியை தந்துள்ளது.
Similar News
News September 1, 2025
இல்லத்தரசிகள் பணத்தை சேமிக்க ‘4’ டிப்ஸ்..

*வீட்டின் EB பில்லில் கவனமாக இருங்க. தேவையற்ற நேரத்தில் ஃபேன், பல்பு, லைட், டிவி Off செய்யுங்கள்.
*அதிகமாக சமையல் பொருள்களை கொண்டு சமைத்து, அதனை யாரும் சாப்பிடாமல் வீணடிக்க வேண்டாம். *சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அது பல நேரங்களில் உதவும்.
*பண்டிகை காலங்களில் அதிகப்படியான துணியோ, பொருள்களோ வாங்கிக் குவிக்க வேண்டாம். தேவைக்கேற்ப வாங்குங்கள். SHARE IT.
News September 1, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிரவு கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
பெற்றோர்களே உஷார்! Digital Dementia தெரியுமா?

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே Digital Dementia என்று வரையறுக்கின்றனர். ஞாபக சக்தி இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் focus செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் மாறுவார்களாம். SHARE IT!