News May 7, 2025
அட்சய திருதியைக்கு இலவச தங்கம்.. ஜியோவின் ஆஃபர்!

அட்சய திருதியை முன்னிட்டு ₹1000 இருந்தால், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து, அதற்கு இலவச தங்கம் பெறும் திட்டத்தை ‘Jio Finance’ கொண்டுவந்துள்ளது. ஏப்ரல் 29 – மே 5 வரை, JioFinance அல்லது MyJio ஆப்களில், ₹1,000 – ₹9,999 வரை வாங்கினால் 1% இலவச தங்கமும் , ₹10,000-க்கு மேல் வாங்கினால், 2% இலவச தங்கமும் வழங்கப்படுகிறது. இதற்கு வழங்கப்படும் கூப்பனை இந்த ஆப்பிலேயே Redeem செய்து கொள்ளலாம். SHARE IT.
Similar News
News November 25, 2025
மே.வங்கத்தில் 10 லட்சம் SIR விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தை போல் மே.வங்கத்திலும் SIR பணிகள் நவ.4 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7.64 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4.45 கோடி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவுள்ளதால், நிராகரிப்பு எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாம்.
News November 25, 2025
தூத்துக்குடியில் குவியும் பறவைகள் PHOTOS

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளன. இந்த வருடம் ஏராளமான புலம்பெயர் பறவைகள், மீன், பூச்சிகள் உள்ளிட்ட இரைகளுக்காக குவிந்துள்ளன. இது ஈரநிலங்களில் சுற்றுச்சுழல் மேம்பட்டு இருப்பதை பிரதிபலிக்கிறது. மேலே, பறவைகளில் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 25, 2025
மகாவீரர் பொன்மொழிகள்

*தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை.
*தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாததையும் தனக்கு எடுத்து கொள்ளாதிருத்தல்.
*ஆன்மிக நோக்கில் ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு அடைய முடியும்.
*நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.


