News March 19, 2025
2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் எப்போது வழங்கப்படும் என பேரவையில், MLA சேகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்த பிறகு பதிவு செய்து காத்திருந்த 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு CMன் அனுமதி பெற்று முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
Similar News
News March 19, 2025
எம்.சான்ட் விலை உயர்வு… வீடு கட்டும் செலவு அதிகரிக்கும்

விலை உயராத பொருளே இருக்காது போல. தற்போது எம்.சான்ட், பி.சான்ட் விலைகள் உயர்ந்துள்ளன. 1 டன் எம்.சான்ட் ₹650இல் இருந்து ₹1,250ஆகவும், பி.சான்ட் ₹750இல் இருந்து ₹1,500ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லாரி எம்.சான்ட் (6 unit) ₹55,000ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், வீடு கட்டும் செலவு 1 சதுர அடிக்கு ₹100 அதிகரிக்கும். எனவே, விலையை முறைப்படுத்த வேண்டுமெனவும் அரசுக்கு காேரிக்கை எழுந்துள்ளது.
News March 19, 2025
TVK சார்பில் தண்ணீர் பந்தல்: விஜய் உத்தரவு

TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைக்க பரிந்துரைத்துள்ளார். மேலும், தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 19, 2025
நாட்டின் பணக்கார எம்எல்ஏ, ஏழை எம்எல்ஏ யார் தெரியுமா?

நாட்டின் பணக்கார எம்எல்ஏ, மும்பை காட்கோபார் (கிழக்கு) தொகுதி பாஜக எம்எல்ஏவான பராக் ஷா ஆவார். அவருக்கு ரூ.3,400 கோடி சொத்து இருப்பதாக ADR தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்து, பணக்கார எம்எல்ஏ டி.கே. சிவக்குமார் (காங்.,), அவருக்கு ரூ.1,413 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மே.வங்க பாஜக எம்எல்ஏ நிர்மல் குமாரே மிகவும் ஏழை எம்எல்ஏ, அவருக்கு ரூ.1,700 சொத்தே இருப்பதாக ADR கூறியுள்ளது.