News December 14, 2024

ஜன.10க்குள் இலவச வேட்டி, சேலை: அமைச்சர் உறுதி

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் டிச.31க்குள் 90% பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி உறுதியளித்துள்ளார். ஜன.10க்குள் எஞ்சிய நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறிய அவர், திமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி, சேலைகள் தரமாக வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News March 26, 2026

நடிகர் சேதுராமன் மரணம்.. மனைவி உருக்கம்

image

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்ளிட்ட படங்களில் நடித்த டாக்டர் சேதுராமன் இளம் வயதிலேயே காலமானார். தனது கணவரின் மறைவு குறித்து உமா சேதுராமன் தற்போது உருக்கமாக பேசியுள்ளார். ‘அவர் (சேதுராமன்) மறைந்தபோது கர்ப்பமாக இருந்தேன். கையில் 1 வயது பெண் குழந்தையும் இருந்தது. இருப்பினும், சோர்ந்துவிடாமல் கணவர் விட்டுச் சென்ற கிளினிக்கை திறம்பட நடத்தி வருகிறேன்’ என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

News March 26, 2026

மாம்பழ சின்னத்தை முடக்க அதிகாரம் இல்லை: ECI

image

பாமக தலைவராக தன்னை அறிவிக்கும் வரை மாம்பழச் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணையின் போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி, சின்னத்தை முடக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை என ECI தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மாலையே தீர்ப்பு வழங்கப்படும் என உரிமையியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News March 26, 2026

USA, இஸ்ரேலுக்கு கொடுத்த பதிலடியை பட்டியலிட்ட ஈரான்

image

இஸ்ரேல், அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தற்போதுவரை 700 ஏவுகணைகளை வீசியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், 3,600 ட்ரோன்களை ஏவி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா, இஸ்ரேலின் 200 ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக குறிப்பிட்ட ஈரான், இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைஃபா நகரங்களை தரைமட்டமாக்கி விடுவோம் என எச்சரித்துள்ளது. போர் முடிவுக்கு வருமா?

error: Content is protected !!