News September 11, 2025

கர்ப்பிணிகளுக்கு இலவச பிரசவம்; அசத்தல் திட்டம்

image

மத்திய அரசின் ஜனனி-ஷிஷு சுரக்ஷா திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அட்மிஷன் ஆவது முதல் டெலிவரி வரை அத்தனை செலவையும் அரசே ஏற்கும். அதாவது, கர்ப்பிணிகளுக்கான மருந்து, உணவு, போக்குவரத்து, பரிசோதனைகள் என அத்தனை செலவும் இலவசமாக கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெற, கர்ப்ப காலத்தில் அரசு ஹாஸ்பிடலில் பதிவு செய்து, ஜனனி சுரக்ஷா அட்டையை வாங்கிக்கொள்ளுங்கள். SHARE.

Similar News

News September 11, 2025

பொறுப்பு DGP-க்கு எதிரான மனு தள்ளுபடி

image

தமிழக பொறுப்பு DGP-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில்(SC) தாக்கலான வழக்கில், மாநில அரசு அனுப்பிய டிஜிபி பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என UPSC-க்கு ஆணையிடப்பட்டது. இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

News September 11, 2025

தங்கம் விலை உயரும்போது இதை செய்யலாமா?

image

இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை 35%-க்கும் மேல் உயர்ந்துள்ளது. விலை அதிகரிப்பு, பண்டிகை காலம் தொடக்கம், GST திருத்தம் போன்றவற்றால், நகை மீதான முதலீடு கவனம் பெறுகிறது. தங்க நகை கடை நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி, உத்திகள் மற்றும் நுகர்வோர் உணர்வைப் பொறுத்து மாறும். இதனால், திடமான அடிப்படை கூறுகள், சந்தை போக்குகளை அடிப்படையாக கொண்டு நகை பங்குகளில் முதலீடு செய்யலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News September 11, 2025

விஜய்யிசத்துக்கு 100% கேரண்டி: ‘ஜனநாயகன்’ ஸ்பெஷல் அப்டேட்

image

தரமான சம்பவங்களுடன் ‘ஜனநாயகன்’ உருவாகி வருவதாக படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் தெரிவித்துள்ளார். படத்தில் விஜய்யிசத்தை 100% கேரண்டி என கூறிய அவர், அதற்கு பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். விஷாலின் ‘கதகளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிரதீப்புக்கு ‘ஜனநாயகன்’ 25-வது படம். விசய்யிசத்தை பார்க்க நீங்க ரெடியா?

error: Content is protected !!