News August 10, 2024

TNPSC, SSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

image

அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஆக.12 முதல் 16 வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. TNPSC, SSC, ரயில்வே, வங்கி மற்றும் ஆசிரியர் தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படும். மேலும், tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இத்தேர்வுகளுக்கான மேன்படாக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Similar News

News September 16, 2025

துணை ஜனாதிபதியை சந்தித்தார் இபிஎஸ்

image

டெல்லியில் துணை ஜனாதிபதியை இபிஎஸ் சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், சிபி ராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளார்.

News September 16, 2025

யுவராஜ், உத்தப்பாவுக்கு ED சம்மன்!

image

சட்ட விரோத சூதாட்ட விளம்பர வழக்கில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் யுவராஜ் சிங் & ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. அதில், உத்தப்பா வரும் 22-ம் தேதியும், யுவராஜ் சிங் வரும் 23-ம் தேதியும் நேரில் ஆஜராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் வீரர்கள் சுரேஷ் ரெய்னா & ஷிகர் தவான் உள்பட நடிகைகள் மிமி சக்ரபோர்த்தி, ஊர்வசி ஆகியோரும் விசாரிக்கப்பட்டிருந்தனர்.

News September 16, 2025

ஆண்களே! விந்தணு அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிடுங்க

image

இந்தியாவில் விந்தணு குறைப்பாட்டால் சுமார் 1.3 கோடி ஆண்கள் தவிப்பதாக தரவுகள் சொல்கிறது. இந்த பிரச்னை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வைட்டமின் சி, துத்தநாகம், ஆண்டி ஆக்ஸிடன்ட்டுகள், இரும்பு சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது அவசியம். அது என்னென்ன பழங்கள் என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!