News December 8, 2024
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக இலவச பயிற்சி வகுப்பு

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு தமிழக அரசு சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வெளியே எங்கும் செல்ல வேண்டாம். வீட்டில் அமர்ந்து கொண்டே பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழக அரசின் கல்வி டிவியில் நாளை முதல் 13ஆம் தேதி வரை காலை 7-9 மணி வரையும், இரவு 7-9 மணி வரையும் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. என்ன ரெடியாயிட்டிங்களா?
Similar News
News August 21, 2025
அஜித் மரணத்தில் புதிய குற்றவாளி.. அதிர்ச்சி தகவல்

அஜித் குமார் மரண வழக்கில், CBI ஒரே மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது குற்றவாளியாக தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் பெயரையும் சேர்த்திருப்பது குற்றப் பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே, நிகிதாவின் நகைத் திருட்டு வழக்கு விசாரணையை CBI தொடங்க இருப்பதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
News August 21, 2025
PM மோடி எந்த போன் யூஸ் பண்ணுறார் தெரியுமா?

நம்முடைய போனே ரொம்ப Privacy-யானது என்றால், PM மோடி யூஸ் பண்ணும் போன் குறித்து யோசிங்க. Rudra எனப் பெயரிடப்பட்டுள்ள, RAX(Restricted Area Exchange) என்ற போனை அவர் உபயோகிக்கிறார். இந்த போன், ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவரிசையில் செயல்படுகிறது. மேலும், எவராலும் ஹேக் பண்ண முடியாத அளவிற்கு சிப் ஒன்றும் போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரிடம் Rudra 2 என்ற இன்னொரு போனும் உள்ளது.
News August 21, 2025
மருத்துவ, ஆயுள் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது

GST வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்ய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. GST 2.0-ல் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான வரியை 18% இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் காப்பீடுக்கு வரியாக ரூ.3,600 செலுத்த வேண்டும். இனி 0% வரியாக இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டினால் போதும்.