News November 24, 2024

இலவசமாக கார் டிரைவிங் பயிற்சி.. TN அரசு அறிவிப்பு

image

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இலவசமாக கார் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. 45 நாள்கள் வாகன ஓட்டுநர், 30 நாள்கள் போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச கல்வித் தகுதி 8,10, 12ஆம் வகுப்பு ஆகும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இத்திட்டத்துக்கு www.nanmudhalvan.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 7, 2025

School Fees-க்கு ₹1 லட்சம் தருகிறது அரசு!

image

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை வழங்குகிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற <>scholarships.gov.in<<>> – ல் அப்ளை பண்ணுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

WORLD CHAMPION – காசிமேடு கீர்த்தனா!

image

காசிமேடு கீர்த்தனா- கேரம் விளையாட்டில் தவிர்க்க முடியாத பெயர். மாலத்தீவில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் கீர்த்தனா(21) ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று, உலக சாம்பியன் ஆகியுள்ளார். தந்தையை சிறுவயதிலேயே இழந்த நிலையில், கீர்த்தனாவின் 2 தம்பிகளின் வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது. வறுமை வாட்டினாலும், விடாமுயற்சியால் வென்ற கீர்த்தனாவிற்கு பாராட்டுகள்!

News December 7, 2025

BREAKING: விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

image

ஈரோட்டில் டிச.16-ல் விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் 75 ஆயிரம் பேர் வந்து, செல்லும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் இன்று அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில், இடம் சிறியதாக இருப்பதாக கூறி, தவெக கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது, விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

error: Content is protected !!