News March 11, 2025
இலவச பஸ் பயணம்.. தெலுங்கானா வேற லெவல்

தமிழகத்தைப் போல், தெலுங்கானாவிலும் பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் எந்த மாநில பெண் என்றாலும் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் தெலுங்கானாவில் அந்த மாநில பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும். ஆதாரை நடத்துநர் பார்த்து உறுதிசெய்த பிறகே பஸ்சில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
Similar News
News March 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 203 ▶குறள்: அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். ▶பொருள்: தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
News March 11, 2025
செல்வராகவனின் பார்ட் 2 படம் – வெளியான புது அப்டேட்!

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் 7G ரெயின்போ காலனி. யுவன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இதன் 2ம் பாகத்தையும் செல்வராகவனே இயக்கி வருகிறார். இன்னும் 2 வாரத்தில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
News March 11, 2025
இன்றைய (மார்ச் 11) நல்ல நேரம்

▶மார்ச்- 11 ▶மாசி – 27 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 AM – 04:30 AM ▶எமகண்டம்: 09:00 PM – 10:30 PM ▶குளிகை: 12:00 AM- 01:30 AM ▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶நட்சத்திரம் : ஆயில்யம்.