News September 12, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச AI படிப்புகள்

image

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாக AI படிப்புகளை வழங்கவுள்ளதாக IIT மெட்ராஸ் அறிவித்துள்ளது. வகுப்பறை கற்பித்தலில், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் திறன்களை ஆசிரியர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். கால அளவு: 25 – 45 மணி நேரம். சான்றிதழ் பெற விரும்புவோர் குறைந்த தொகையை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.10. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 12, 2025

ஐபோன் 17 புக்கிங் தொடக்கம்.. எதில் ஆர்டர் செய்யலாம்?

image

ஐபோன் 17 சீரிஸ் போன்களுக்கான புக்கிங், இந்தியாவில் இன்று தொடங்குகிறது. அதேபோல், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ 3 ஆகியவற்றையும் இன்று புக் செய்யலாம். மாலை 5.30 மணிக்கு மேல் ஆப்பிள் நிறுவனத்தின் வலைதளத்தில் புக்கிங் செய்யலாம். அதேபோல் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸில் ஆர்டர் செய்யலாம். இன்று ஆர்டர் செய்யப்படும் போன்கள், வரும் 19-ம் தேதி டெலிவரி செய்யப்படும்.

News September 12, 2025

மக்களின் கருத்து முக்கியம்: PMக்கு ஸ்டாலின் கடிதம்

image

சுரங்க திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு CM ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை திரும்ப பெற கோரி PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சில சுரங்கங்களால் சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News September 12, 2025

20- 30 வயதுடையவர்களை பாதிக்கும் ‘Cardiac Ageing’

image

50 வயதில் ஏற்படும் மாரடைப்பு, இப்போது 20- 30 வயதில் இருப்பவர்களையே பாதிக்கிறது. இதனை டாக்டர்கள் ‘Cardiac ageing’ என்கிறார்கள். அதாவது வயதை விட இதயம் வேகமாக முதுமை அடைந்து வருவதை இது குறிக்கிறது. நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல், ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, அதிக ஸ்கிரீன் டைம், மது, புகை போன்றவை இதயத்தை அதிகமாக பாதிக்கிறதாம். எனவே, உடற்பயிற்சி, நல்ல உணவு, போதிய தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

error: Content is protected !!