News November 19, 2024

புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி

image

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நவ.19 முதல் 25ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு முதல் நாளான இன்று இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதனால் இன்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தாமல் புராதன சின்னங்களை பார்வையிடலாம்.

Similar News

News November 19, 2024

ஆதார் கார்டு போதும்.. ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் ஃப்ரீ

image

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டை இலவசமாக பெற முடியும். எவ்வளவு வருமானம் பெறுபவராக இருந்தாலும் இந்தக் காப்பீடு கிடைக்கும். ஆதார் அட்டை உள்ள அனைவரும் இந்த ஆயுஷ்மான் அட்டைக்கு (AYUSHMAN CARD) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆயுஷ்மான் செயலியை டவுன்லோடு செய்து இதில் இணையலாம்.

News November 19, 2024

₹300 கோடி கிளப்பில் நுழைந்தது அமரன்

image

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ₹300 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. SK கேரியரிலும் அதிக வசூல் செய்த படமாக அமரன் மாறியுள்ளது. திரைப்படம் 19 நாள்களை கடந்து இன்னும் வெற்றிநடை போடுவதால் ₹400 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க அமரன் பாத்துட்டீங்களா?

News November 19, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ATACMS ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. ➤அர்மீனியா நீதிமன்ற ஆலோசனைக்குழுத் தலைவர் ஆண்ட்ரேசியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ➤இந்தாண்டு சவுதியில் இதுவரை 274 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ESOHR தெரிவித்துள்ளது. ➤ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்த அமெரிக்காவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது.