News August 27, 2024
நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி மோசடி

நெல்லை மாவட்ட காவல்துறை நேற்று(ஆக.,26) வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ மற்றும் 1930 புகார் அளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News September 10, 2025
நெல்லை: சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு; சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாக உள்ள சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவி குழுக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு 0462-2903302, 7708678400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
நெல்லை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வருகிற நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 8ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை நீட்டிப்பு செய்துள்ளது. மாலை 5 மணிக்குள் விருப்பமுள்ள நெல்லை மாவட்ட ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். *ஷேர்
News September 10, 2025
கவின் கொலை வழக்கு – மூவருக்கு காவல் நீட்டிப்பு

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான் சுர்ஜித் அவரது தந்தை சரவணன் உள்பட மூவரின் நீதிமன்ற காவல் நேற்று 9ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாளை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிபதி ஹேமா மூவருக்கும் 15 நாட்கள் காவல் நீட்டித்தார். அதன்படி வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.