News August 27, 2024
நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி மோசடி

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ மற்றும் 1930 புகார் அளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
நெல்லை: ரேஷன் கார்டு இருக்கா.? கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நாளை (டிச.13) நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று புதிய ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, கடைகளின் செயல்பாடுகள், தரம் குறித்த புகார் போன்ற மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News December 12, 2025
நெல்லை: மகளை கர்பமாக்கிய தந்தை

நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன், மனவளர்ச்சி குறைபாடு கொண்ட 27 வயது திருமணமாகாத பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவரது 65 வயது தந்தை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 12, 2025
நெல்லை: நடந்து சென்ற ஊழியருக்கு ஏற்பட்ட சோகம்

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் உலகநாதன் (61). மரக்கடையில் பணி செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாலையோரம் நடந்து சென்று அந்த வழியாக வந்த பைக் உலகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்த அவர் நெல்லை G.H-ல் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 11) காலை உயிரிழந்தார். இது குறித்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


