News April 14, 2025

மோசடி மன்னன் மெகுல் சோக்சி அதிரடி கைது!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹17,219 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை நாடு கடத்துவதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. மோசடி செய்துவிட்டு நாடு நாடாக சுற்றித் திரிந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, கடந்த 2023 முதல் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். இந்திய அரசின் பல கட்ட முயற்சிகளின் விளைவாக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News November 26, 2025

இந்தியாவின் முதல் தானியங்கி டிரோன் எதிர்ப்பு வாகனம்

image

ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திரஜால் நிறுவனம், நாட்டின் முதல் AI-ஆல் இயங்கும் தானியங்கி டிரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. எதிரிநாடுகளின் டிரோன்களை கண்காணித்து, தாக்கி அழிக்கும் வல்லமையை இது கொண்டுள்ளது. சமீபகாலமாக, பாகிஸ்தானில் இருந்து டிரோன் வழியாக ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தீர்வாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

News November 26, 2025

விஜய் கட்சியில் இணையும் அடுத்த முக்கிய தலைவர்!

image

தமிழக அரசியல் களம் நாளை பல முக்கிய மாற்றங்களை சந்திக்க காத்திருக்கிறது. அதிமுக Ex அமைச்சர் KA செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் நாளை காலை தவெகவில் இணைய உள்ளார். அவருடன் Ex MP சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைய உள்ளனர். அதேபோல், புதுச்சேரி Ex பாஜக மாநிலத் தலைவரும், Ex MLA-வுமான சாமிநாதனும் தனது ஆதரவாளர்களுடன் விஜய் கட்சியில் இணையவுள்ளார்.

News November 26, 2025

தமிழ்நாட்டில் இப்போ இதுதான் TRENDING நியூஸ்

image

*அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
*விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
*இந்தியா படுதோல்வி; ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா
*<>இவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை ₹1,000<<>>

error: Content is protected !!