News September 23, 2025
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை தனி நாடாக, <<17788776>>பல்வேறு நாடுகள்<<>> அங்கீகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது பிரான்ஸும் இணைந்துள்ளது. ஐநா பொதுச்சபையில் இதை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 23, 2025
CM ஸ்டாலின் தலைமையில் இன்று MPக்கள் கூட்டம்

அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு CM ஸ்டாலின் தலைமையில் MP-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு முடிவுகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம், கல்வி நிதி நிறுத்தம் உள்ளிட்டவைக்கு எதிராக போராட்டங்கள் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 23, 2025
MP சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் மோசடி கும்பல்

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியும், MP-யுமான சுதா மூர்த்தியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. கடந்த 5-ம் தேதி தொலைத்தொடர்புத்துறை அதிகாரி என்ற பெயரில் ஒரு நபர் சுதாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சுதா மூர்த்தியின் செல்போன் எண்ணில் இருந்து தவறான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாக கூறி அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 23, 2025
குடலை குளுகுளுப்பாக வைத்திருக்க இது போதும்!

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பலருக்கும் ஆசை, ஆனால் துரித உணவுகளால் அதை பாழாக்கி வருகின்றனர். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை தினந்தோறும் எடுத்துக்கொள்வது கட்டாயம். அந்த உணவு எது? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மேலே SWIPE செய்து பாருங்கள்…