News March 18, 2024

ஆட்டோவில் ஆடுகளைக் கடத்திய நால்வர் கைது

image

திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கரகம்பாக்கம் கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்தி சென்ற 4 பேரை அப்பகுதியினர் மடக்கி பிடித்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர்கள் அம்பத்தூரை சேர்ந்த தீபக்குமார், கௌதம், சசிகுமார் மற்றும் ஹரிஹரன் என்பது தெரியவந்தது.

Similar News

News April 2, 2025

திருவள்ளூரில் நூற்றாண்டு விழா போட்டிகள்

image

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபாடி, கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் 03.04.2025 முதல் 05.04.2025 வரை நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு 7401703482, 8072908634 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தீராத நோய்களைத் தீர்க்கும் வைத்திய வீரராகவர்!

image

திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். வைத்திய வீரராகவர் என்ற பெயரில் பெருமாள் அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால் எண்ணத்தால் உருவான பாவங்கள் மற்றும் தீராத நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தல பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு உள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

திருவள்ளூரில் நீட் எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 4  மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதன்படி, திருவள்ளூர், கடம்பத்தூர் -காக்கனூர் நடுநிலைப்பள்ளி, பூந்தமல்லி, வில்லிவாக்கம் -ஆவடி S.A பொறியியல் கல்லூரி, R.K பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு- அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் கோஜன் பொறியியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!