News April 13, 2025
ரியல் மேட்ரிட் அணி முன்னாள் பயிற்சியாளர் காலமானார்

ரியல் மேட்ரிட் மற்றும் நெதர்லாந்து கால்பந்து அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் லியோ பீன்ஹாக்கர் (82) காலமானார். அவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான், ரியல் மேட்ரிட் அணிக்கு 3 முறை லாலிகா கோப்பைகளையும், ஒருமுறை கோபா டெல் ரே கோப்பையையும், 2 முறை சூப்பர் கோபா கோப்பைகளையும் வென்றுள்ளது. அவரது மறைவுக்கு ரியல் மேட்ரிட் அணியின் நிர்வாகம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
Similar News
News September 17, 2025
USA வர்த்தக பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

<<17712326>>இந்தியா – அமெரிக்கா<<>> இடையே நேற்று நடந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிற்கும் பலனளிக்கும் விதமாக ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என இருநாடுகளும் விரும்புவதாகவும் கூறியுள்ளது. வேளாண் மற்றும் பால்பண்ணை துறைக்கான சந்தையை அமெரிக்காவிற்கு திறக்க சில நெகிழ்வுத்தன்மைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 17, 2025
ஒரு முஸ்லிம் நாட்டை தொட்டால் 40 நாடுகள் வரும்!

கத்தாரில் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தலைநகர் தோஹாவில் துருக்கி, பாக்., உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தின. அதில், வெளிப்புற தாக்குதல்களை எதிர்கொள்ள, ஐரோப்பிய நாடுகளின் NATO அமைப்பை போல், முஸ்லிம் நாடுகளும் ராணுவ கூட்டமைப்பை உருவாக்குவது என முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த 2015-லேயே இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
SKY-ஐ பன்றி என விமர்சித்த விவகாரம்: புது விளக்கம்

<<17731873>>சூர்யகுமார் யாதவ்<<>>வை பன்றி என முன்னாள் பாக்., வீரர் முகமது யூசஃப் விமர்சித்தது சர்ச்சையானது. ஆனால், நாட்டிற்காக விளையாடும் உறுதிமிக்க வீரர்களை மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்பது தனது உள்நோக்கம் அல்ல என யூசஃப் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அஃப்ரிடியை நாய் குரைப்பதாக பதான் விமர்சித்த போது இந்திய மக்கள் எங்கே போனார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.