News October 7, 2025
முன்னாள் பிரதமர் தேவகவுடா ஹாஸ்பிடலில் அனுமதி

நாட்டின் முன்னாள் பிரதமரும் கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவருமான H.D.தேவகவுடா (92), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணிப்பால் ஹாஸ்பிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News October 7, 2025
நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

முன்னோடியான கண்டுபிடிப்புகள், சமூகத்தில் முக்கியமான தாக்கம், அல்லது மனிதநேயம் சார்ந்த முயற்சிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நோபல் வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வென்ற இந்தியாவை சேர்ந்த, இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் யார் என்று தெரியுமா? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த வருடம் நோபல் பரிசு நமக்கு கிடைக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க?
News October 7, 2025
BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் தெரிவித்திருந்தார். இந்தாண்டில் 8 பேர் டெங்குவால் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், காய்ச்சல் பரவல் அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
News October 7, 2025
டெல்லி CM-ன் பேச்சு வெட்கக்கேடானது: கனிமொழி

அறிவு சுடரை ஏற்றி, மதத்தை பரப்பி, சமூக நலனுக்காக பிராமண சமூகம் பாடுபடுகிறது என்று டெல்லி CM ரேகா குப்தா கூறியிருந்தார். இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM சாதியை தூக்கி பிடிப்பது வெட்கக்கேடானது என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இந்த சாதிய அடக்குமுறையை ஒழிக்கவே பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடியதாக தெரிவித்த அவர், மக்களிடையே பிரிவை உருவாக்குவது பாஜக தான் என சாடினார்.