News September 3, 2025
செங்கோட்டையனுடன் இணைந்தார் முன்னாள் எம்பி

இபிஎஸ் உடன் மோதல் நீடித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக செங்கோட்டையனை அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா சந்தித்து ஆலோசனை செய்தார். இதன்பின் பேசிய செங்கோட்டையன், நாளை மறுநாள் சரியாக காலை 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன், அப்போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
தவெக உடன் விசிக, காங்., பேச்சுவார்த்தை: நயினார்

திமுக கூட்டணி பலமாக இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூரில் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், விசிகவும் தற்போது தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த கூட்டணி எப்படி இருந்தாலும் சரி, வரும் தேர்தலில் NDA கூட்டணி நிச்சயமாக வெல்லும் எனவும் உறுதியாக கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
News December 8, 2025
BREAKING: முக்கிய அரசியல் தலைவரை சந்திக்கிறார் விஜய்

நாளை புதுச்சேரிக்கு செல்லும் வழியில், பாமக நிறுவனர் ராமதாஸை விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுமா அல்லது நட்சத்திர விடுதியில் நடைபெறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இருவரும் சந்தித்தால் அரசியலில் இதுதான் நாளை ஹாட் டாபிக். முன்னதாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றபோது, விஜய் சந்திக்கவில்லை என்பதை நாசுக்காக ராமதாஸ் கூறியிருந்தார்.
News December 8, 2025
பாதி கிணறு மட்டுமே கடந்துள்ளோம்: மு.க.ஸ்டாலின்

SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ‘என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி’ எனும் தலைப்பில் காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க திமுகவினர் மும்முரமாக பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.


