News September 8, 2025
சிறையில் ₹522 சம்பாதிக்கும் முன்னாள் MP

பாலியல் வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் பிரஜ்வல் ரேவண்ணா நாள் ஒன்றுக்கு ₹522 சம்பாதிக்கிறார். பெங்களூரு பரப்ப அக்ரஹாரா சிறையில் உள்ள அவருக்கு நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகம் வழங்குவது, கொடுத்த புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது அவரது வேலை ஆகும். வாரத்திற்கு 3 நாள்கள் இந்த வேலையை அவர் செய்ய வேண்டும். இவர் முன்னாள் PM தேவ கவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 8, 2025
மாற்றி மாற்றி பேசுகிறாரா TTV?

கூட்டணி விஷயத்தில் TTV மாற்றி மாற்றி பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். TN-ல் NDA கூட்டணிக்கு EPS தலைமை ஏற்பார் என அமித்ஷா கூறிய போது, பங்காளி சண்டையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனவும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே தனது நோக்கம் என்றும் TTV கூறியிருந்தார். இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க ஏன் மறுக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.
News September 8, 2025
இறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

இஸ்ரேலுடனான போர் விஷயத்தில் ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது SM பதிவில் அவர், போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டு விட்டதாகவும், ஹமாஸும் இதனை ஒப்புக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை மறுத்தால் சந்திக்க போகும் விளைவுகளை ஹமாஸ் அமைப்புக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
News September 8, 2025
அதற்கு அதிமுகவே காரணம்: சீமான் சாடல்

விளை நிலங்களை அழித்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விட மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் அது தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சியாக மட்டுமே இருக்கும் என்றார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக எனவும் அதை தற்போது திமுக தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.