News February 18, 2025
தேர்தல் பணிகளில் முன்னாள் அமைச்சர்களுக்கு கல்தா!

அதிமுகவில் 2026 சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பலரது பெயர்கள் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களின் பட்டியலில் Ex அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், SP வேலுமணி, சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் பெயர்கள் இடம்பெறவில்லை. இது முக்கியமான பொறுப்பு என்பதால் ஏன் வழங்கப்படவில்லை என அவர்களது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
கடனில் தத்தளிக்கும் இந்தியர்கள்!

இந்தியாவில் 28.3 கோடி பேர் கடனில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பதிலளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 2025-ல் மொத்த வீட்டு கடன் ₹15.7 லட்சம் கோடியாக உள்ளது என்று கூறிய அவர், ஒரு நபரின் சராசரி கடன் சுமை ₹3.4 லட்சத்தில் இருந்து, ₹4.8 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News December 6, 2025
வேள்பாரி பட ஹீரோ ரேஸில் 2 நடிகர்கள்

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியால் துவண்டுள்ள ஷங்கர், மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை தேர்ந்தெடுத்துள்ளார். இதன்படி, ‘வேள்பாரி’ நாவலை படமாக எடுத்து, அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மெயின் ஹீரோவாக சூர்யா (அ) விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் பொருத்தமாக இருப்பார்கள்?
News December 6, 2025
தமிழகம் முழுவதும் நாளை வெடிக்கிறது போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அனுமதியளிக்கவில்லை. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (டிச.7) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.


