News April 25, 2025
KTK முன்னாள் அமைச்சர் ராமையா காலமானார்

கர்நாடக (KTK) காங்கிரஸ் EX அமைச்சரும், சிருங்கேரி தொகுதி EX MLAவுமான பெகனே ராமைய்யா (90) காலமானார். 1978-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ராமைய்யா (ராகுலுடன் கை குலுக்குபவர்), ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் காலமானார். RIP.
Similar News
News January 3, 2026
கிருஷ்ணகிரிக்கு அரசு உறுதிமொழி குழு வருகை – ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகின்ற செவ்வாய்க்கிழமை (ஜன.6) அன்று தமிழக சட்டப் பேரவையின் 2024- 2026ம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழு அதன் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் வருகை தந்து மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனா். பிற்பகல் 2 மணிக்கு உயா் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும், என்று மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
SA அணிக்கு 301 ரன்கள் டார்கெட் நிர்ணயித்த இந்தியா

தென்னாப்பிரிக்கா U19 அணிக்கு எதிரான முதல் ODI போட்டியில், இந்திய அணி 300 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினாலும், அடுத்து வந்த ஹர்வன்ஷ் பங்காலியா 93 ரன்களையும், RS அம்ப்ரிஷ் 65 ரன்களையும் விளாசியதால் டீசண்டான ஸ்கோர் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க பவுலர் JJ பேசன் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
News January 3, 2026
‘மகளிர் உரிமைத் தொகை ₹3,000’

தற்போது மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ₹3,000 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பரிசீலித்து ஆலோசிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


