News August 19, 2024
இந்திய ராணுவ முன்னாள் தளபதி மரணம்

இந்திய ராணுவ முன்னாள் தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர், ராணுவத்தில் சேர்ந்து 43 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்துள்ளார். குறிப்பாக, 2000 அக்டோபர் முதல் 2002 டிசம்பர் வரை ராணுவ தளபதியாக பதவி வகித்துள்ளார். ஓய்வுக்கு பிறகு சென்னையில் மனைவி, மகளுடன் வசித்து வந்த அவர், தனது 84ஆவது வயதில் காலமானார். நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
Similar News
News March 22, 2026
கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை: சரத்

கட்சியில் சேர்த்துவிட்டு உரிய பொறுப்பு கொடுக்காமல் ஒருவரை காக்க வைப்பது தவறு என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அவர், திருச்சி பொதுக்கூட்ட மேடையில் என்னுடைய போட்டோ கூட இல்லை என எனது ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர் என்றார். பாஜகவில் இணையும்போது தேசிய பதவி தருவதாக சொன்ன வாக்கை நிறைவேற்றவில்லை; பொறுப்புகள் கொடுத்தால் தான் பொறுப்போடு செயல்பட முடியும் எனவும் கூறியுள்ளார்.
News March 22, 2026
இந்த வார்த்தையை இப்போதும் கேட்பதுண்டா?

வெளியூர்களில் ஒருவர் நம்மை பார்க்கும்போதும், வரன் தேடும்போதும் ‘பூர்விகம்’ எது என்று முன்னர் கேட்பதுண்டு. ஆனால், தற்போதோ சொந்த ஊர் எது என கேட்கின்றனர். பூர்விகம் என்பது உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர், சொந்த ஊர் என்பது நீங்கள் பிறந்த ஊர். தற்போது பலரும் பணி காரணமாக வெளியூரில் சென்று செட்டில் ஆகிவிடுகின்றனர். இதனால் பூர்விகம் என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது என கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 22, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

நாடு முழுவதும் ஏப்ரலில் 3 மாதங்களுக்கான ரேஷன் பொருள்கள் ஒரே தவணையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே, ஜூன் மாதங்களுக்கான பொருள்களை அடுத்த மாதமே பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவும், உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாம். SHARE IT


