News April 8, 2025
பாஜகவில் இணைந்த முன்னாள் CSK வீரர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்காகவும், IPL-ல் CSK உள்பட பல்வேறு அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். இந்திய அணியில் 2014-ல் அறிமுகமானார். இந்திய அணிக்காக 73 ODI-களில் விளையாடி, 1,389 ரன்களை எடுத்துள்ளார்.
Similar News
News January 26, 2026
டபுள் இன்ஜின், ரிப்பேர் ஆன இன்ஜின்: கனிமொழி

பல்வேறு திசைகளில் இருந்து பல கனவுகளுடன் தமிழ்நாட்டை நோக்கி படையெடுப்பவர்களுக்கு தமிழக பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி தெரிவித்துள்ளார். பாஜக சொல்லும் டபுள் இன்ஜின், ரிப்பேர் ஆன இன்ஜினாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்துக் காட்டியதுதான் திராவிட மாடல் இன்ஜின் என மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
News January 26, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

அதிமுக கூட்டணியில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி புதிதாக இணைந்துள்ளது. சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்த இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வெட்டவலம் கே.மணிகண்டன், பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் EPS-யிடம் வழங்கினார்.
News January 26, 2026
ஆஃபர்களை அள்ளி வீசும் BSNL

ஜியோ, ஏர்டெல் போன்ற நெட்வொர்க்குகளில் ₹400 வரை செலவிட வேண்டியிருக்கும் பிளானை ₹251-க்கு BSNL வழங்குகிறது. 30 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில், 100 GB டேட்டா, தினமும் 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். மேலும், BiTV சேவையையும் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஜன.31-ம் தேதியுடன் இந்த ஆஃபர் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே முந்துங்கள். SHARE IT.


