News December 20, 2024
ஹரியானா முன்னாள் முதல்வர் காலமானார்

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா (89) காலமானார். ’இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், நான்கு முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஏழு முறை MLAவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார்.
Similar News
News September 17, 2025
மோடி தாயாரின் AI வீடியோவை நீக்க கோர்ட் உத்தரவு

PM மோடியை அவரது தாயார் திட்டுவது போன்ற AI வீடியோவை, பிஹார் காங்கிரஸ் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடியின் தாயாரை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜகவினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பாஜகவினர் பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த AI வீடியோவை உடனடியாக நீக்க காங்கிரஸுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News September 17, 2025
குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதுபோதும்

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இஞ்சி பூண்டு மிக நல்லதாம். நோயெதிர்ப்பு சக்தி கொண்ட இவற்றை குழந்தைக்கு சரியான முறையில் கொடுப்பதன் மூலம் பாதுகாப்பாக வளர்வார்கள். ஒரு வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு ஒரு பல் பூண்டை பாலில் சேர்த்து வேகவைத்து மசித்து கொடுக்கலாம். இஞ்சியை தேவையான அளவு உணவில் கலந்து கொடுத்தால் செரிமானம் நன்றாக இருக்கும். SHARE IT.
News September 17, 2025
BREAKING: விஜய் கட்சியினருக்கு எச்சரிக்கை

தவெக தலைவர் விஜய், தூத்துக்குடியில் அக்.11-ம் தேதி பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி போலீஸில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய் வரும்போது தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது. விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கான அனுமதியை போலீஸ் பாரபட்சமின்றி பரிசீலிக்க <<17735795>>தவெக கோர்ட்டை நாடியது<<>> குறிப்பிடத்தக்கது.