News June 16, 2024

முன்னாள் ஆளுநர் முரளிதரன் காலமானார்

image

ஒடிஷா முன்னாள் ஆளுநர் முரளிதரன் சந்திரகாந்த் பண்டாரே (95) வயது முதிர்வு காரணமாக காலமானார். மகாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார். அத்துடன், 3 முறை ராஜ்யசபை எம்.பி.,யாகவும் பதவி வகித்திருக்கிறார். அவரது மறைவுக்கு முதல்வர் மோகன் சரண் மஜி, நவீன் பட்நாயக், சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை: அன்புமணி

image

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 1, 2026

3 ராசிகளுக்கு எச்சரிக்கை

image

சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் இம்மாதம் யுதி திருஷ்டி யோகம் உண்டாக இருப்பதால் 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். அதன்படி, *மேஷம்: காதல் வாழ்க்கையில் சிக்கல் வரும். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைப்பது கடினமாக இருக்கும். *துலாம்: நிதி இழப்புகள் ஏற்படலாம். சொத்து வாங்கும் (அ) விற்கும் முடிவுகள் தவறாக முடியலாம். *கும்பம்: உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள்.

News March 1, 2026

மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

image

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!