News August 11, 2024

முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மறைவு

image

காங்., மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான நட்வர் சிங் (93), சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ராஜஸ்தானில் 1931ஆம் ஆண்டு பிறந்த அவர், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது சேவைக்காக 1984ஆம் ஆண்டு ’பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. நட்வர் சிங் மறைவுக்கு PM மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 7, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 7, மார்கழி 23 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்:9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News January 7, 2026

SPORTS 360°: டி20-ல் முதலிடத்தை இழந்த தீப்தி சர்மா

image

*விஜய் ஹசாரே தொடரில் கர்நாடகா, மும்பை, பஞ்சாப் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. டி20 பவுலிங் ரேங்கிங் பட்டியலில் தீப்தி சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.. *உ.பி.,யில் நடைபெறும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. *ISL கால்பந்து போட்டி பிப்ரவரி 14-ம் தேதி தொடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

விஜய்யை மறைமுகமாக சீண்டிய உதயநிதி

image

விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தவெகவை விமர்சிப்பது DCM உதயநிதி ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில் புதிது புதிதாக யார்(விஜய்) வேண்டுமானாலும் வரலாம் எனவும் ஆனால் அவர்கள் எல்லாம் அட்டைதான், காற்று அடித்தால் பறந்துவிடுவார்கள் என்றும் சாடியுள்ளார். மேலும் பாஜக உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பணிந்து போக இது அதிமுக இல்லை என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!