News April 16, 2025
திமுக முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி காலமானார்

குளித்தலை தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கந்தசாமி காலமானார். திமுகவை அண்ணா ஆரம்பித்த காலத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர் கந்தசாமி. கடந்த 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு அவர் வென்றார். இதையடுத்து, 1971-ம் ஆண்டு தேர்தலிலும் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 15, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் <<18561240>>e-KYC அப்டேட்<<>> செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் குறிப்பாக, 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விரல் ரேகையை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக TN அரசு விளக்கம் அளித்துள்ளது. ரேகையை பதிவு செய்யாதவர்கள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
News December 15, 2025
அதிக உயிரிழப்புகள்.. கொசு தான் டாப்

உலகளவில் ஆண்டுதோறும், மனித இறப்புகளுக்கு காரணமாக இருக்கும் விலங்குகளின் பட்டியலை WHO மற்று BBC Science Focus இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் பட்டியலில், நாம் நினைத்து பார்க்காத விலங்குகள் இடம்பிடித்துள்ளன. எந்த உயிரினத்தால், எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 15, 2025
SHOCKING: டிஜே சத்தத்தால் சிறுமி உயிரிழப்பு!

தனது நண்பர்களுடன் ஆடிப்பாடி ஆனந்தமாக பொழுதை கழிக்க, திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுமி இன்று மண்ணுலகை விட்டு பிரிந்துள்ளார். அவர் உடம்பு முடியாமலோ, விபத்திலோ மரணிக்கவில்லை. ஆனந்தமாக டான்ஸ் ஆடி மகிழ வைக்கவேண்டிய DJ அவரை கொன்றுவிட்டது. உ.பி.,யை சேர்ந்த ரஷி வால்மீகி(14), அதிக DJ சத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அதீத இரைச்சலை ஏற்படுத்தும் இந்த DJ சடங்கை நிறுத்துவது யார்?


