News December 16, 2024

CSK முன்னாள் வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

image

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்கீத் ராஜ்புத், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 29 போட்டிகளில், 24 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அன்கீத், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

இந்தியா – USA விவகாரம்: இன்று தீர்வு எட்டப்படுமா?

image

இந்தியா – USA இடையே இன்று வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க USA அதிகாரிகள் இன்று இந்தியா வர உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயம், பால்பண்ணைத்துறையில் இந்திய சந்தையை திறந்துவிட USA வலியுறுத்தி வரும் நிலையில், இந்திய அரசு அதற்கு மறுப்பதால், ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

News September 16, 2025

7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், வரும் 21-ம் தேதி வரையிலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

News September 16, 2025

ஒரு லட்சம் வரை குறைந்த SWIFT காரின் விலை

image

சமீபத்தில் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஸ்விஃப்ட் மாடலுக்கு ₹1.06 லட்சம் வரையிலும், டிசையர் மாடலுக்கு ₹87,000 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் Wagon R (₹64,000வரையும்), Celerio (₹63,000), Alto K10 (53,000), S-Presso விலை (53,000) வரையும் குறைகிறது.

error: Content is protected !!