News March 18, 2024
EDக்கு எதிராக முன்னாள் முதல்வர் மகள் வழக்கு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், ED-யின் கைது சட்டவிரோதமானது என கவிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.
Similar News
News April 12, 2025
கருவருக்கப்படும் மகள்கள்: இந்த AI காலத்திலா இப்படி?

ஹரியானாவில் பெண் சிசுக்கொலை தொடர்ந்து அதிகரிப்பது அம்பலமாகியுள்ளது. கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை சட்டவிரோதமாக அறிந்து கொண்டு, கருக்கலைப்பு செய்ய கர்ப்பிணிகள் கணவன் குடும்பத்தால் கட்டாயப்படுத்தப்படுவது இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், மாநில அரசு சிறப்பு பணிக்குழுவை நியமித்ததோடு, 300 அபார்ஷன் மையங்களின் லைசென்ஸையும் ரத்து செய்துள்ளது.
News April 12, 2025
WHATSAPP குரூப்பில் புது வசதி அறிமுகம்.. இனி வேற லெவல்

WHATSAPP புதிதாக 2 வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதில், WHATSAPP குரூப்களில் எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர் என்பதை அறியும் வசதி ஒன்றாகும். இதேபோல், குரூப்களில் வரும் அத்தனை செய்திகளும் நோட்டிபிகேசனாக வராமல், உங்கள் நம்பரை யாரேனும் டேக் செய்தால் மட்டுமே நோட்டிபிகேசனாக வருவது இன்னொரு வசதியாகும். ஐபோன் வாடிக்கையாளர்கள், ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது.
News April 12, 2025
ராசி பலன்கள் (12.04.2025)

➤மேஷம் – இன்பம் ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – தெளிவு ➤கடகம் – உதவி ➤சிம்மம் – ஆர்வம் ➤கன்னி – பயம் ➤துலாம் – சிக்கல் ➤விருச்சிகம் – பரிவு ➤தனுசு – பாசம் ➤மகரம் – உறுதி ➤கும்பம் – மேன்மை ➤மீனம் – பரிவு.