News April 7, 2025
அதிமுக முன்னாள் MLA காலமானார்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தொகுதி அதிமுக முன்னாள் MLA வி.அரங்கராஜ் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அரங்கராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
Similar News
News November 3, 2025
₹1,000 கோடியை தொட்ட நன்கொடை.. CM நன்றி

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊருபள்ளி’ திட்டத்திற்கான நிதி ₹1,000 கோடியை தொட்டதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். மேலும், இந்த நிதியின் மூலம் ஆயிரக்கணக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

சீன அரசின் நடவடிக்கையால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தங்கம் வாங்கும் வணிகர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த வாட் வரி விலக்கை, அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. இதன் விளைவாக சீனாவில் தங்கம் விலை அதிகரித்து, வாங்குவது குறையலாம். இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் இருப்பு அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இந்தியாவிலும் தங்கம் விலை குறையலாம்.
News November 3, 2025
20 கோடி ஆபாச வீடியோக்கள்… தடை செய்ய SC-ல் வழக்கு

ஆபாச வெப்சைட்களை தடை செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து SC பெஞ்ச் உத்தரவிட்டது. நாட்டில் கோடிக்கணக்கான ஆபாச தளங்கள், சிறார்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பதாகவும், 20 கோடிக்கு அதிகமான ஆபாச வீடியோக்கள் அவற்றில் உள்ளதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அவற்றை தடை செய்யும் வகையில் தேசியக் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு SC உத்தரவிட கோரப்பட்டிருந்தது.


