News August 16, 2024
முன்னாள் அதிமுக எம்எல்ஏ காலமானார்

திருப்பத்தூர் அதிமுக Ex MLA ரமேஷ் (58) மாரடைப்பால் காலமானார். உடல்நலம் பாதிப்பால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. எம்ஜிஆர், ஜெ.,வின் தீவிர விசுவாசியான இவர், அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவிற்கு, இபிஎஸ், திமுக எம்எல்ஏ நல்லதம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 20, 2025
தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்துவது. *நான் விரும்பியதை அடையும் வரை, நான் இலக்கிலிருந்து ஒருபோதும் வெளியேறுவதில்லை. *முட்டாள்கள் புத்திசாலிகளை முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு புத்திசாலி எந்த மனிதனையும் முட்டாள் என்று அழைக்க மாட்டான். *எனது மிகச்சிறந்த யோசனைகள் ஒரு நல்ல இரவுத் தூக்கத்தைத் தொடர்ந்து வந்தன என்பதை நான் உணர்ந்தேன்.
News October 20, 2025
WWC: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

WWC-யில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த பிறகு, இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. செமிபைனல் செல்ல அடுத்து வரும் நியூசிலாந்து, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டங்களில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை NZ தோற்றால், வங்கதேசத்துக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதோடு, NZ இங்கி., தோற்க வேண்டும். மேலும் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா நல்ல Runrate உடன் இருக்க வேண்டும்.
News October 20, 2025
NATIONAL ROUNDUP: தீ விபத்தில் 65 பட்டாசு கடைகள் சேதம்

*ஜம்மு காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ளூர் மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள்
*பிஹார் தேர்தலையொட்டி 25 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து ஓவைசி கட்சி
*உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 பட்டாசு கடைகள் எரிந்து சேதம்
*தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பை 25-ல் இருந்து 21 ஆக குறைக்க மசோதா நிறைவேற்றப்படும் என அறிவித்த CMரேவந்த் ரெட்டி