News March 27, 2024
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்

முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.கே.சின்னசாமி பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், நான்கு முறை எம்எல்ஏ.,வாகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரான இவர் பாஜகவில் இணைந்துள்ளது, அதிமுகவிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Similar News
News December 26, 2025
தங்கம் விலையை குறைக்க களத்தில் குதித்த பெண்கள்!

உண்மைதான்.. அரியலூர், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஞ்சள் தாலிக்கயிறை கையில் வைத்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி விலை உயர்ந்து கொண்டே சென்றால் பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்வது என கேள்வி எழுப்பிய அவர்கள், தங்க விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உங்கள் கருத்து என்ன?
News December 26, 2025
BREAKING: விஜய் கட்சி சின்னம் இதுவா..!

2026 தேர்தலில் தவெகவிற்கு என்ன சின்னம் வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்டோ, விசில் உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் தவெக வழங்கியிருந்தது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு ’அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு. ஆனால் இப்போது சொல்லமாட்டோம்’ என KAS பேசியது குறிப்பிடத்தக்கது.
News December 26, 2025
காலணி தொழிற்சாலையை ஆய்வு செய்த CM ஸ்டாலின்!

உளுந்துார்பேட்டை சிப்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் காலணி தொழிற்சாலையை CM ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். ₹1,350 கோடி மதிப்பிலான தொழிற்சாலையின் 50% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் ₹139 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் ஆபிஸ் உட்பட ₹1,774 கோடியில் 314 முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர், 2.16 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


