News June 26, 2024
அதிமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலை

போக்சோ வழக்கில் இருந்து அதிமுக முன்னால் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 2015ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுமியின் புகாரின் பேரில் நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் பிறழ் சாட்சியங்கள் இருப்பதால் நாஞ்சில் முருகேசனை விடுதலை செய்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
ஆயுதத்தை எடுக்க சொன்ன டிரம்ப்; பிரிட்டனில் பரபரப்பு

சமீபத்தில் பிரிட்டனில் குடியேற்றத்துக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடந்தது பரபரப்பை கிளப்பியது. பிற நாட்டினர் பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க, தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள் என பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். மேலும், பிற நாட்டினர் குடியேறினால் அது நாட்டை உள்ளிருந்து அழித்துவிடும் என கூறிய அவர், இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
News September 19, 2025
ICC-ஐ சூடேற்றி பார்த்த PAK; பாய்கிறதா நடவடிக்கை?

UAE உடனான ஆசியகோப்பை போட்டிக்கு முன், பல விதிகளை மீறியதற்காக PAK மீது நடவடிக்கை எடுக்க ICC முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. HandShake சர்ச்சையால், அம்பையர் ஆண்டி பைகிராஃப்டை நீக்க சொல்லி Pak வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும், PAK அணி நிர்வாகம் விதிகளை மீறி பைகிராஃப்ட் இடம் தனியாக ஆலோசனை நடத்தியது. இதனால் PAK மீது நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது.
News September 19, 2025
BREAKING: தங்கம் விலையில் சிறிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.19) சவரனுக்கு ₹80 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,230-க்கும், சவரன் ₹81,840-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹400 குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.