News December 21, 2024

மன்னிப்பு மட்டுமே கடைசி தீர்வு: பிரேமலதா

image

அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். சரித்திரம் படைத்த தலைவர்கள் குறித்து பேச யாருக்கும் தார்மீக உரிமையில்லை என்ற அவர், அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை ஏற்க முடியாது என்றார். நாடாளுமன்றத்தில் மக்களுக்கான திட்டங்கள் குறித்து பேசப்படுவது இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News March 5, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 5, 2026

யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

image

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News March 5, 2026

OMG! ரொம்ப நேரம் உட்கார்ந்தா, இப்படி ஒரு ஆபத்தா…

image

அலுவலகமோ வீடோ, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல்வேறு நோய்கள் வரும் என்கின்றனர் டாக்டர்கள்: *உடல்பருமன் *இதயநோய் & சில வகை புற்றுநோய்கள் *ரத்த சர்க்கரை *தொப்பை & இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது *முதுகு-கழுத்து வலி *தொடை தசைகள் பலவீனமாதல் *ஜீரண பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க 30 mins-க்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம், எளிதான உடற்பயிற்சிகள் (வாரம் 150 mins) அவசியம்.

error: Content is protected !!