News September 1, 2024
வரலாற்று உச்சத்தில் Forex Reserve

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $7.02 பில்லியன் அதிகரித்து, $681.68 பில்லியன் என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. முன்னதாக, $674.91 பில்லியன் வரலாற்று உச்சமாக இருந்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதி கணக்கெடுப்பின்படி, தங்கத்தின் கையிருப்பு $893 மில்லியன் உயர்ந்து, $60.99 பில்லியனாக அதிகரித்துள்ளது. SDR பொறுத்தமட்டில் $118 மில்லியன் அதிகரித்து, $18.45 பில்லியனாக உயர்ந்துள்ளது.
Similar News
News July 9, 2025
ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்

*நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.*நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.*வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது. *இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. *எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.
News July 9, 2025
பும்ராவுக்கு போட்டியாக ஆர்ச்சரை களமிறக்க வாய்ப்பு

இந்தியா – இங்கி., எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இணைவார் என தகவல்கள் உள்ளன. அதைப்போன்று இந்திய அணிக்கு செக் வைக்கும் வகையில் இங்கி., அணியில் ஆர்ச்சரை களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ச்சர் நல்ல உடற்தகுதியுடன் தயாராக இருப்பதாக இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லமும் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.