News August 10, 2024
வரலாற்று உச்சம் தொட்ட அந்நியச் செலாவணி

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $7.53 பில்லியன் அதிகரித்து, $674.91 பில்லியனை எட்டியுள்ளது. இது வரலாறு காணாத உச்சமாகும். முன்னதாக, அதிகபட்ச கையிருப்பு ஜூலை 18ஆம் தேதி $670.85 பில்லியனாக இருந்தது. ஆகஸ்ட் 2ஆம் தேதி கணக்கின்படி, தங்கம் கையிருப்பு $2.40 பில்லியன் உயர்ந்து, $60.09 பில்லியனாக அதிகரித்துள்ளது. SDR பொறுத்தமட்டில், $41 மில்லியன் குறைந்து, $18.16 பில்லியனாக உள்ளது.
Similar News
News December 9, 2025
₹4,000 தரும் PM யாசஸ்வி திட்டம்.. அவகாசம் நீட்டிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.15 வரை <
News December 9, 2025
விஜய்க்கு அரசியல் தெரியாது: நயினார் நாகேந்திரன்

புதுச்சேரிக்கு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை என குற்றஞ்சாட்டிய விஜய்யை நயினார் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட ஆகாமல் நேரடியாக CM அரியணையில் அமர்வதற்கு விஜய் ஆசைப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் பற்றியும் விஜய்க்கு ஏதாவது தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 9, 2025
முடி அடர்த்தியா வளர இந்த 2 பொருள்கள் போதும்

ஒருவரின் முக அழகை மெருகேற்றுவது முடியாக தான் இருக்கிறது. இதனால் அதீத முடி உதிர்வால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்ய 2 பொருள்கள் போதும். முட்டை & தயிரில் புரதம், பையோட்டின் அதிக அளவில் இருப்பதால் முடி சார்ந்த பிரச்னைகளை இது சரி செய்கிறது. இதற்கு, வாரத்திற்கு இருமுறை முட்டையின் வெள்ளைக் கரு & ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து ஹேர் பேக் போட்டுவந்தால் முடி அடர்த்தியாக வளரும். SHARE.


