News May 13, 2024

இந்திய பங்குகளை விற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

image

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். மே மாதத்தில் மட்டும் சுமார் ₹17 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றிருக்கிறார்கள். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் சீனாவில் முதலீடு செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Similar News

News February 19, 2026

திமுகவை எதிர்க்க கட்சி ஆரம்பித்த கேப்டன்.. FLASH BACK

image

2005.. திமுகவை கேப்டன் விமர்சித்து வந்த காலம் அது. அப்போது கோயம்பேடு சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, அங்கிருந்த ஆண்டாள் அழகர் மண்டபம் கையைவிட்டு போனது. இதனால் டென்ஷனான விஜயகாந்த் 2006-ல் தேமுதிகவை தொடங்கினார். அப்படி தொடங்கப்பட்ட கட்சியை இன்று திமுகவுடன் இணைத்திருக்கிறார் பிரேமலதா. எனவே இது நிர்வாகிகளின் விருப்பம்தானா என அரசியல் ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

News February 19, 2026

TNSTC பென்ஷன்தாரர்களுக்கு ₹2,446 கோடி ஒதுக்கீடு!

image

அரசுப் போக்குவரத்துக் கழக பென்ஷன்தாரர்களுக்கான பலன்களை வழங்க ₹2,446 கோடி சிறப்பு நிதிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற 6,867 பேரின் வங்கிக் கணக்கில் இந்தப் பணம் விரைவில் வரவு வைக்கப்படவுள்ளது. பணிக்கொடை, PF, EL, பென்ஷன் ஒப்படைப்பு எனப் பல பிரிவுகளின் கீழ் இப்பணம் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

News February 19, 2026

தேமுதிக விஷயத்தில் அதிமுக கோட்டைவிட்டது இப்படிதான்

image

2024-லேயே தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட்டை தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் EPS ஏமாற்றிவிட்டதாக பேசப்பட்டது. இதனால் தேமுதிக நம்பிக்கை இழந்ததாக பேசப்பட்டது. இந்நிலையில் 2026 தேர்தலுக்கு 1 MP சீட்டுக்கு கிரீன் சிக்னல் விழுந்திருப்பதால் திமுக-தேமுதிக <<19181870>>கூட்டணி<<>> உருவாகியிருக்கிறது. அந்த 1 MP சீட்டை அப்போதே ஒதுக்கியிருந்தால் அதிமுகவுக்கு இப்பின்னடைவு ஏற்பட்டிருக்காது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!